'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

நடிகர் பிர்லா போஸ் சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்திலும் ஒரு ரவுண்டு அடித்து கலக்கி வருகிறார். சீரியல்களில் அதிகமாக போலீஸ் வேடங்களில் நடித்து வரும் அவர், அண்மையில் கயல் தொடரில் வஜ்ரவேல் என்ற கதாபாத்திரத்தில் அதிரடியாக நுழைந்திருந்தார். ஆனால், சில நாட்களிலேயே வஜ்ரவேல் கதாபாத்திரத்தில் பிர்லா போஸுக்கு பதிலாக வேறொரு நபர் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இதுகுறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய பிர்லா போஸ், 'கயல் சீரியலில் எனது வஜ்ரேவேல் கதாபாத்திரம் என்ட்ரிக்கு பின் சீரியல் சூடுபிடித்தது. அதில் இருந்து என்னை நீக்கியதற்கு காரணம் அப்போது எனக்கு ஒரு படத்தின் ஷூட்டிங் இருந்தது. நான் முறைப்படி சீரியல் யூனிட்டில் பெர்மிஷன் வாங்கிக்கொண்டு தான் போனேன். போன இடத்தில் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது. இதற்காக தனியாக நேரம் ஒதுக்கி ப்ரீயாகவே நடித்து கொடுத்துவிட்டேன்.
ஆனால், அதன்பின் என்னுடைய கதாபாத்திரத்தில் வேறொரு நபர் நடித்து வருவதாக கேள்விபட்டேன். என்னிடம் எதையுமே முறைப்படி தெரிவிக்கவில்லை. உண்மையில் பிரச்னை என்னவென்றால் டைரக்டர் சாப்பிட்ட பிறகு தான் ஆர்டிஸ்ட்டுகள் சாப்பிட வேண்டும் என்று சொன்னார்கள். இதை நான் தட்டிக்கேட்டேன். இதனால் என் மீது அந்த டைரக்டருக்கு கோபமா? என்று தெரியவில்லை. டைரக்டர் தான் கேம் ஆடியுள்ளார் ' என்று கூறியுள்ளார்.




