'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் | 'தி ராஜா சாப்' போட்டியை சமாளிக்குமா 'ஜனநாயகன்' | 'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால், சாய் தன்ஷிகாவுக்கு நிச்சயதார்த்தம் : பிறந்தநாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு |
சின்னத்திரை சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் சந்தோஷ். தற்போது 'ரஞ்சனி' என்கிற தொடரில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். இவரும் யூ-டியூப் வெப் சீரியஸ்களில் நடித்து வந்த மவுனிகாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். மவுனிகா இப்போது தான் 'லப்பர் பந்து' படத்தின் மூலம் அதிக புகழை பெற்றிருந்தார். இவர்கள் இருவரது நிச்சயதார்த்தமும் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது குருவாயூரில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியானதையடுத்து சந்தோஷ் - மவுனிகா தம்பதியினருக்கு சக நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் திருமண வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.