ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ஜீ தமிழில் கடந்த 2022ம் ஆண்டு முதல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் 'மாரி'. இதில், ஆஷிகா படுகோன் ஹீரோயினாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 800 எபிசோடுகளை தாண்டிவிட்ட இந்த தொடர், சமீபகாலமாக அரைத்த மாவையே அரைப்பது போல் சுமாராக ஓடி வருகிறது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் இந்த தொடரில் நடித்து வரும் ஹீரோயின் ஆஷிகா படுகோன் சீரியலை விட்டு விலகுவதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்போது அதை மறுத்துவிட்ட ஆஷிகா தொடர்ந்து சில எபிசோடுகள் நடித்து வந்த நிலையில் தற்போது மாரி தொடரை விட்டு விலகுவதாக அவரே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், மாரி தொடரில் தனது பயணம் முடிந்துவிட்டதாகவும் இத்தனை நாட்கள் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் பதிவிட்டுள்ளார்.