டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல் முதல்பார்வை வெளியானது | ஜுன் முதல் 'கல்கி 2898 ஏடி' இரண்டாம் பாக படப்பிடிப்பு | வீட்டை அடமானம் வைத்து தான் எமர்ஜென்சி படத்தை முடித்தேன் ; கங்கனா ரணாவத் | வேட்டியை அவிழ்த்து அநாகரிக வார்த்தைகள் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விநாயகன் | நான் அரசியலுக்கு வருவேனா ? நடிகை பத்மபிரியா சூசக தகவல் | வெற்றிப்படத்தில் நடித்தும் என் காட்சிகள் இடம் பெறவில்லை ; ரியாஸ் கான் விரக்தி | வியட்நாம் காலனி வில்லன் நடிகர் மாரடைப்பால் மரணம் | ஷூட்டிங் துவங்கும் முன்பே பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு கிளம்பிய அக்ஷய் குமார் ; சல்மான்கான் வருத்தம் | டாக்டர் எழுதிய நாவலை மம்முட்டிக்காக படமாக்கிய கவுதம் மேனன் | சீரியல் நடிகரை திருமணம் முடித்த சினிமா நடிகை! |
சின்னத்திரை சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் சந்தோஷ். தற்போது 'ரஞ்சனி' என்கிற தொடரில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். இவரும் யூ-டியூப் வெப் சீரியஸ்களில் நடித்து வந்த மவுனிகாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். மவுனிகா இப்போது தான் 'லப்பர் பந்து' படத்தின் மூலம் அதிக புகழை பெற்றிருந்தார். இவர்கள் இருவரது நிச்சயதார்த்தமும் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது குருவாயூரில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியானதையடுத்து சந்தோஷ் - மவுனிகா தம்பதியினருக்கு சக நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் திருமண வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.