சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர்களில் ஒன்று மாரி. இந்த தொடரில் ஆஷிகா படுகோன் ஹீரோயினாக நடித்து வருகிறார். மக்கள் மத்தியில் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இந்த தொடரில் நடித்து வரும் முக்கிய நடிகர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். ஆரம்பத்தில் நடிகை சோனா மாரி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், திடீரென வெளியேறிவிட்டார்.
அதன்பின் பல பிரபலங்கள் மாறிவிட்ட நிலையில் தற்போது ஹீரோயினாக நடித்து வரும் ஆஷிகா படுகோனும் வெளியேறுவதாக தகவல் கசிந்துள்ளது. ஆஷிகா படுகோனுக்கு சீரியல் குழுவினருடன் எந்தவித பிரச்னையும் இல்லாத போதும் சினிமா வாய்ப்பு கிடைத்திருப்பதால் சீரியலை விட்டு விலகுவதாக சக பிரபலங்களிடம் கூறியிருக்கிறார். இதனையடுத்து மாரி சீரியலின் அடுத்த கதாநாயகி யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.