சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
விஜய் டிவி பிரபலங்களான வெற்றி வசந்த் - வைஷ்ணவி திருமணம் அண்மையில் தான் முடிந்தது. இந்நிலையில், மற்றொரு விஜய் டிவி நடிகையான தனுஷிக்கின் திருமண நிச்சயதார்த்தம் சைலண்டாக முடிந்துள்ளது. இலங்கையிலிருந்து ஆங்கரிங் கனவோடு தமிழகம் வந்த தனுஷிக் தற்போது விஜய் டிவியின் நீ நான் காதல் தொடரில் நடிகையாகிவிட்டார். இவருக்கு கடந்த நவம்பர் 27ம் தேதி மணி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வரும் நிலையில் தனுஷிக் - மணி ஆகியோருக்கு வாழ்த்துகளை ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.