இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் |

ஆந்திராவை சேர்ந்த ஹரிகா தமிழில் ஒளிபரப்பான திருமகள் சீரியல் மூலம் அறிமுகமானார். அதேபோல் கோயம்புத்தூரை சேர்ந்த அரவிஷ், சீரியல்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து வருவதை அண்மையில் தான் அறிவித்தனர். இந்நிலையில் இருவீட்டு தரப்பினரும் அரவிஷ்-ஹரிகா காதலுக்கு பச்சைக்கொடி காட்ட, வருகிற நவம்பர் 19ம் தேதி அரவிஷ்-ஹரிகா ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. இந்த மகிழ்வான செய்தி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் சின்னத்திரை பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் இருவருக்கும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.