குட் பேட் அக்லி படத்திற்காக அனிருத் பாடிய முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | பாரபட்சம் காட்டுவது வருத்தமாக உள்ளது : ஜோதிகா | ரீ-ரிலீஸ் ஆகும் தனுஷின் பொல்லாதவன் | சிம்பு 51வது பட அப்டேட் தந்த அஷ்வத் மாரிமுத்து | 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் எப்போது? | தனுஷ் 55வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? | இறுதிக்கட்டத்தில் ‛7ஜி ரெயின்போ காலனி 2' | பாலா செய்த அதே தவறைச் செய்கிறாரா வெற்றிமாறன்? | பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமே பணியாற்றியுள்ள முதல் மலையாள படம் 'மும்தா' | ஸ்வீட் ஹார்ட் : விஜய்யை புகழும் வில்லன் பாபி தியோல் |
சினிமா உலகில் காதலும், திருமணமும், விவாகரத்தும் அடிக்கடி நடக்கும் ஒரு விஷயமாகிவிட்டது. தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவும், நடிகராக இருக்கும் நாக சைதன்யாவும் பல வருடங்களாகக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்கள். சில வருடங்களிலேயே அவர்களுக்குப் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள்.
சமந்தா இன்னும் சிங்கிளாகவே இருக்கிறார், நாக சைதன்யா, 'பொன்னியின் செல்வன்' நடிகை சோபிதா துலிபலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
நாக சைதன்யாவுடனான திருமண நிச்சயத்தின் போது பகிர்ந்து கொண்ட மோதிரத்தை சமந்தா செயினில் அணியும் டாலாராக மாற்றிக் கொண்ட விஷயம் இப்போது சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. இது குறித்து ஜுவல்லரி டிசைனர் துருமித் மெருலியா வெளியிட்ட வீடியோ மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்வுகளில் அந்த டாலரை அணிந்து கொண்டு சமந்தா கலந்து கொண்டுள்ளார். வைரத்தால் ஆன அந்த டாலர் டிசைன் அவ்வளவு அழகாக உள்ளது. விவகாரத்தான பலரும் இப்படித்தான் அந்த மோதிரத்தை வேறு வேறு டிசைன்களில் மாற்றி அணிந்து கொள்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.