குட் பேட் அக்லி படத்திற்காக அனிருத் பாடிய முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | பாரபட்சம் காட்டுவது வருத்தமாக உள்ளது : ஜோதிகா | ரீ-ரிலீஸ் ஆகும் தனுஷின் பொல்லாதவன் | சிம்பு 51வது பட அப்டேட் தந்த அஷ்வத் மாரிமுத்து | 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் எப்போது? | தனுஷ் 55வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? | இறுதிக்கட்டத்தில் ‛7ஜி ரெயின்போ காலனி 2' | பாலா செய்த அதே தவறைச் செய்கிறாரா வெற்றிமாறன்? | பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமே பணியாற்றியுள்ள முதல் மலையாள படம் 'மும்தா' | ஸ்வீட் ஹார்ட் : விஜய்யை புகழும் வில்லன் பாபி தியோல் |
இளம் வயதிலேயே இசையில் சாதனை படைத்தவர் சென்னையை சேர்ந்த லிடியன் நாதஸ்வரம். மோகன்லால் இயக்கிய 'பரோஸ்' படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். இதற்கிடையில் லிடியன், சிம்பொனி இசை அமைக்க இருப்பதாகவும், அவரை இளையராஜா சிம்பொனி இசை அமைக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் நேற்று தகவல்கள் வெளியானது.
ஆனால் இதனை இளையராஜா மறுத்துள்ளார். லிடியன் அமைத்திருப்பது சிம்பொனி அல்ல வெறும் சினிமா இசை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது "லிடியன் நாதஸ்வரம் என்னிடம் இசை கற்க வந்தவர். ஒருமுறை நான் சிம்பொனிக்கு கம்போஸ் பண்ணியிருக்கேன் என்று ஒரு இசையை போட்டு காட்டினார். 20 விநாடி அதை கேட்டுவிட்டு இதென்ன சினிமா பின்னணி இசை மாதிரி பண்ணியிருக்கிறாய், இது தப்பாச்சே, இது சிம்பொனி இல்லை. முதலில் சிம்பொனி என்றால் என்ன என்று தெரிந்துகொள் அதன் பிறகு கம்போஸ் பண்ணு என்று சொன்னேன். சினிமா பின்னணி இசை போன்ற ஒன்றை பண்ணிவிட்டு அதை என்னிடம் ஒப்புதல் பெறுவதற்காக, எனது அங்கீகாரத்திற்காக கொண்டு வந்தார். அது சிம்பொனி இல்லை, சிம்பொனி கற்றுக் கொள் என்று அவருக்கு வழிகாட்டினேன்" என்றார்.