தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

'கயல்' படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்திரன். அதன் பிறகு 'ரூபாய்' படத்தில் நாயனாக நடித்தார். பிறகு நடித்த பார்ட்டி படம் வெளிவரவில்லை. திட்டம்போட்டு திருடுற கூட்டம், மன்மதலீலை படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்தார்.
இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு 'சிங்கா' என்ற படத்தில் கதை நாயகனாக நடிக்கிறார். அவரது ஜோடியாக சிஜா ரோஸ் நடிக்கிறார். புதுமுகம் மீனாட்சி, ஆதித்யா கதிர், மலையாள நடிகர் அரிஸ்டோ சுரேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ருத்ரம் சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. மனோஜ் சின்னசாமி இசையமைக்க, அசோக் குமார்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வசந்த், சற்குணம் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ராஜா துரை சிங்கம் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது “மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பையும், முறியாத பிணைப்பையும், கொண்டாடும் இதயத்தை வருடும் குடும்பக் கதையாக சிங்கா உருவாகி இருக்கிறது. கதையின் மையத்தில் இருக்கும் சிங்கா எனும் அன்பான லாப்ரடார் நாய் தனது அழகிய அரவணைப்பினாலும், ஆழமான உணர்வுகளாலும் அனைவரின் மனங்களையும் நிச்சயம் கவருவான். மனிதனுடன் பகிரும் நட்பின் மூலம் அன்பு, நம்பிக்கை, வாழ்க்கைப் பயணம் ஆகியவை எவ்வாறு மலர்கின்றன என்பதைக் காட்டும் கதை இது” என்றார்.