டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | மீண்டும் போதையில் கலாட்டா ; ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுதலை | காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் | 'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! | துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? |
'கயல்' தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் அமுதா. பல தொடர்களில் பல கேரக்டர்களில் நடித்துள்ளார். சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் சக்தி பிரபு என்பரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இருவரும் சாலிகிராமத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.
அமுதாவிற்கும் அவரது கணவருக்கும் சமீபகாலமாக கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இதனால் கணவர் சக்தி பிரபு, அமுதாவை விட்டு பிரிந்து ஆவடியில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் அமுதா கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. படப்பிடிப்புகளுக்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த அமுதா விரக்தியின் உச்சத்தில் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் கிருமிநாசினியை எடுத்து குடித்தார். பின்னர் தான் இப்படி ஒரு விஷயத்தை செய்துவிட்டதாக தனது தோழியும், டி.வி. நடிகையுமான கிரணுக்கு செல்போனில் தகவல் சொல்லி அழுதுள்ளார்.
இதையடுத்து கிரண், உடனடியாக சாலிகிராமம் விரைந்து சென்று அமுதாவை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அமுதா தான் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் திண்டலில் இருப்பதாகவும், நான் தற்கொலை முயற்சி செய்ததாக வரும் தகவல்களில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளார்.
'அமுதா தற்கொலைக்கு முயன்றுள்ளார், அவரது நண்பர்கள் அவரை மருத்துமனையில் சேர்த்து குணமாக்கி உள்ளனர். தற்போது போலீஸ் விசாரணைக்கு பயந்து சொந்த ஊர் சென்று விட்டார். என்றாலும் அவர் மீது தற்கொலை முயற்சி பதிவு செய்யப்படும்' என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.