ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

பிக்பாஸ் சீசன் 7ல் பிரபல சின்னத்திரை நடிகையான ரச்சிதா மஹாலெட்சுமியின் கணவர் தினேஷ் வைல்ட் கார்டு என்ட்ரியாக போட்டியில் நுழைந்துள்ளார். தினேஷை தன் பக்கம் இழுக்க நினைக்கும் மாயா குழுவினர் தினேஷ் - ரச்சிதா திருமணம் குறித்து பேச திட்டமிடுகின்றனர். இதன் வீடியோவானது அண்மையில் வெளியாகி வைரலானது. இதனால் கோபமடைந்துள்ள ரச்சிதா இன்ஸ்டாகிராமில் மிகவும் கோபமாக பதிவிட்டுள்ளார். அதில் அவர், 'என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச அங்கு யாருக்கும் உரிமை இல்லை. அனுபவிச்சங்களுக்கு தான் வலியும் வேதனையும் தெரியும். என்னுடைய வாழ்க்கை பொது பிரச்னை இல்லை, எல்லோரும் அதில் கருத்து சொல்ல. உங்களுடைய கேவலமான கேம் ப்ளானுக்காக என் பெயரை பயன்படுத்தாதீர்கள்' என்று கூறியுள்ளார்.




