இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
திருச்செல்வம் இயக்கத்தில் எதிர்நீச்சல் தொடர் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. திருச்செல்வமும் புரட்சியாளராக ஜீவானந்தம் என்கிற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவருக்கு அசிஸ்டண்டாக எப்போதும் ஹிஜாப் அணிந்து நடித்து வருபவர் தான் நடிகை ஜிபா. சின்னத்திரையில் ஹிஜாப்புடன் நடிக்க வந்த முதல் பெண் இவர் தான் என்கிறார்கள்.
டிக்டாக் பிரபலமான இவரை, எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் வைஷ்ணவி தான் நடிக்க அழைத்துள்ளார். ஆடிஷனுக்கு வந்த ஜிபாவை இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்துக்கு திருச்செல்வம் ஓகே சொல்ல, நடிக்க வேண்டுமென்றால் ஹிஜாப் அணிந்து கொண்டு தான் நடிப்பேன் என ஜிபா கண்டிஷன் போட்டுள்ளார். அதற்கு திருச்செல்வமும் சம்மதிக்க பர்ஹானா கதாபாத்திரத்தில் ஜிபா நடித்து வருகிறார்.
ஜிபா சீரியலில் நடித்து வருவதை வீட்டாரிடம் சொல்லவே இல்லையாம். தந்தையின் நண்பர்கள் சீரியலை பார்த்து சொல்லிய பிறகு தான் ஜிபா சீரியலில் நடித்து வருவது அவரது வீட்டுக்கே தெரிய வந்துள்ளது. இருப்பினும் மகள் ஹிஜாப் அணிந்து கொண்டு நடிப்பதால் ஜிபாவின் தந்தையும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொண்டாராம்.