விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு |
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீசன்1 அந்த சேனலை பல முறை டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடிக்க செய்தது. இதனையடுத்து சிபு சூரியன், வினுஷா தேவி, பரீனா ஆசாத், ரூபாஸ்ரீ என முன்னணி நட்சத்திரங்களுடன் தொடங்கப்பட்ட பாரதி கண்ணம்மா சீசன் 2க்கும் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இந்த தொடரானது எதிர்பார்த்த வெற்றியை பெறாததோடு டிஆர்பியிலும் மிகவும் பின்தங்கி இருப்பதால் பாரதி கண்ணம்மா சீசன் 2 விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும், பாரதி கண்ணம்மா சீசன் 2க்கு பதிலாக ராதிகா சரத்குமார் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'கிழக்கு வாசல்' தொடர் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி இல்லையென்றால் பாரதி கண்ணம்மா 2 சீரியல் நேரம் மாற்றப்படலாம் என்கிறார்கள்.