விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் | 8 ஆண்டுகளுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் கயல் சந்திரன் | இணைந்து நடிக்கும் தாயும், மகளும் | பிளாஷ்பேக் : வில்லுப்பாட்டு கச்சேரி நடத்தி குடும்பத்தை காப்பாற்றிய நடிகர் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை ஏமாற்றிய 'குமாரி' | ரஜினியை சந்தித்த சிம்ரன் | தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு | ‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன் | இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் |
சின்னத்திரை நடிகையான நக்ஷத்திரா 'யாரடி நீ மோகினி', 'வள்ளித் திருமணம்' ஆகிய சீரியல்களின் மூலம் பிரபலமானார். கடந்த வருடம் ஜூலை மாதத்தில் காதலர் விஸ்வாவை கரம்பிடித்த நக்ஷத்திராவின் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. அடுத்த சில மாதங்களிலேயே கருவுற்ற நக்ஷத்திராவுக்கு அண்மையில் தான் வளைகாப்பு நிகழ்வும் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நக்ஷத்திரா குழந்தையின் பிஞ்சு விரல்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்க்கும் பலரும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளை நக்ஷத்திராவுக்கு தெரிவித்து வருகின்றனர்.