விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் | 8 ஆண்டுகளுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் கயல் சந்திரன் | இணைந்து நடிக்கும் தாயும், மகளும் | பிளாஷ்பேக் : வில்லுப்பாட்டு கச்சேரி நடத்தி குடும்பத்தை காப்பாற்றிய நடிகர் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை ஏமாற்றிய 'குமாரி' | ரஜினியை சந்தித்த சிம்ரன் | தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு | ‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன் | இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் |
தொலைக்காட்சி தொகுப்பாளினி, சீரியல் நடிகை என சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நக்ஷத்திரா. சினிமாவிலும் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தற்போது நடித்து வருகிறார். நக்ஷத்திரா, ராகவ் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். அவர்கள் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் நக்ஷத்திரா மற்றும் ராகவ் ஜோடிக்கு திருமணத்துக்கு முன்பாக நடத்தப்படும் சங்கீத் பங்ஷன் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. நக்ஷத்திரா சங்கீத் பங்ஷனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து, அதில் 'உங்கள் அனைவரது அன்பினாலும், ஆசிர்வாதத்தாலும் நாங்கள் இன்று எங்கள் திருமண கொண்டாட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.