விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் | 8 ஆண்டுகளுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் கயல் சந்திரன் | இணைந்து நடிக்கும் தாயும், மகளும் | பிளாஷ்பேக் : வில்லுப்பாட்டு கச்சேரி நடத்தி குடும்பத்தை காப்பாற்றிய நடிகர் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை ஏமாற்றிய 'குமாரி' | ரஜினியை சந்தித்த சிம்ரன் | தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு | ‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன் | இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் |
சின்னத்திரை நடிகையான ஷாலினி இரண்டாவது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றதை போட்டோஷூட் வெளியிட்டு கொண்டாடினார். இதுகுறித்து பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் அண்மையில் அளித்த பேட்டியில் ஷாலினி விளக்கமளித்துள்ளார். ஷாலினியின் முதல் திருமணத்தில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படவே ஒரே மாதத்தில் பிரிந்துவிட்டார். அதன்பின் ரியாஸுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாற இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணத்திற்கு பின் ரியாஸ் தனது சுயரூபத்தை காட்டியிருக்கிறார்.
இரண்டாவது திருமணமும் தோல்வியில் முடிவடையக்கூடாது என்று நினைத்த ஷாலினி குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். அப்போது மது அருந்த சொல்லி கட்டாயப்படுத்துவாராம் ரியாஸ். அப்படி ஒருநாள் மது அருந்திவிட்டு ஷாலினி தூங்கிவிட, ஷாலினி மேல் தண்ணி ஊற்றி எழுப்பி அடித்திருக்கிறார். அதில் ஷாலினிக்கு தலையில் அடிப்பட்டு ரத்தம் வர அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அடித்து துன்புறுத்தினாராம் ரியாஸ். இந்த காரணத்திற்காக தான் ரியாஸ் உடன் விவாகரத்து கிடைக்கப்பெற்ற போது அதை கொண்டாடியதாக ஷாலினி கூறியுள்ளார்.
சின்னத்திரையில் முள்ளும் மலரும் சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமான ஷாலினி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் மாம் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.