‛கண்ணகி' படத்தின் டிரைலர் வெளியானது | இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து தொடரில் இணைந்து நடித்த விஷ்ணுகாந்தும், சம்யுக்தாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில், திருமணமான இரண்டே மாதங்களில் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமிலும் ஒருவரையொருவர் அன்பாலோவ் செய்துள்ளதுடன் தங்களது திருமண புகைப்படங்களையும், காதலிக்கும் போது ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் டெலிட் செய்துள்ளனர்.
இந்நிலையில், சம்யுக்தா வெளியிட்ட சமீபத்திய பதிவில், 'எனது அருமை ஹேட்டர்ஸ்…. நீங்கள் நினைத்தது போலவே நடந்துவிட்டதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதேசமயம் இனி தான் என் வாழ்க்கை ஆரம்பமாகிறது. இனிமேல் என் வாழ்வில் என்ன நடக்கப்போகிறது என்பதை யாராலும் யூகிக்க முடியாது. எனவே, ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளும் சக்தியை கடவுளிடம் வேண்டிகொள்ளுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவின் மூலம் விஷ்ணுகாந்தை விட்டு பிரிவும் முடிவை சம்யுக்தா தீர்க்கமாக எடுத்துவிட்டதாக பலரும் கருத்து கூறி வருகின்றனர்.