சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா | அக்ஷய் குமாரின் ஹிந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
சின்னத்திரை நடிகர் சதீஷ் விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி தொடரில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். ஹீரோ, வில்லன், காமெடி என ஒட்டுமொத்த உருவமாக கோபி ரோல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் கச்சிதமாக பெர்பார்மன்ஸ் செய்து வரும் சதீஷுக்கு ரசிகர் பட்டாளமும் அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன் சதீஷ், பாக்கியலெட்சுமி சீரியலை விட்டு விலகுவதாக திடீரென அறிவித்தார். அதை உறுதிப்படுத்தும் வகையில் மீண்டும் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனால் வருத்தமடைந்த ரசிகர்கள் சதீஷை மீண்டும் கோபி கதாபாத்திரத்தில் தொடரும்படி வேண்டுகோள் வைத்து வந்தனர்.
சக நடிகரான விஷாலும் 'என் அப்பாவை போகவிடமாட்டேன்' என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது வீடியோ வெளியிட்டுள்ள சதீஷ், 'நான் உணர்ச்சிவசப்பட்டு விலகுவதாக கூறிவிட்டேன். எனக்குள் பெர்சனலாக இருந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிட்டது. இனி நான் கோபியாக பாக்கியலெட்சுமி சீரியலில் தொடர்ந்து நடிப்பேன்' என்று கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.