மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
வெளியில் தைரியமாக இருப்பது போல் தோற்றமளிக்கும் பலரும் தங்களுக்குள் ஏதோ ஒரு விஷயத்திற்காக பயந்து கொண்டு தான் இருப்பார்கள். அந்த வகையில், சர்ச்சை நாயகி வனிதா, தன் வாழ்வில் நடக்கும் பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்வதும் பேசுவதும் என தைரியமான பெண்ணுக்கு உதாரணமாக இருந்து வருகிறார். ஆனால், அவருக்குள்ளும் பயம் இருக்கிறது. மிகச்சிறிய அறை, லிப்ட், இருட்டான குகை, திருவிழாக்கூட்டம், ட்ரெயின் போன்ற இடங்களில் இருக்கும் போது நாம் செத்துவிடுவோமோ என்ற பயம் சிலருக்கு உண்டாகும்.
அந்த நோய்க்கு பெயர் தான் ‛க்ளாஸ்ட்ரோபோபியா'. அண்மையில் அளித்த பேட்டியில் தனக்கும் க்ளாஸ்ட்ரோபோபியா இருப்பதாக வனிதா கூறியுள்ளார். லிப்ட், கழிவறை போன்ற சிறிய இடங்களில் தன்னால் நீண்ட நேரம் இருக்க முடியாது என்றும், தனக்கு மிகவும் நெருக்கமான சிலருக்கு மட்டுமே இந்த நோய் எனக்கிருப்பது தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.