ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி | டிரெயின் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | கிரிசில்டா குழந்தைக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும்: கோர்ட்டில் ரங்கராஜ் மனு | பிளாஷ்பேக்: தோல்வி பயத்தில் டைட்டிலை மாற்றிய டி.ஆர்.மகாலிங்கம் | சிக்கலில் ‛காந்தா' : தடை கோரி வழக்கு |

கருப்பு வெள்ளை கால சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான டி.ஆர்.மகாலிங்கம் சொந்தப் படங்கள் எடுத்து சோர்ந்து போனது அறிந்த கதைதான். ஏற்கெனவே நான்கு படங்கள் தயாரித்து, நான்கும் தோல்வி அடைந்த நிலையில் 5வதாக அவர் தயாரித்து நடித்த படம் 'விளையாட்டு பொம்மை'.
1954ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை டி. ஆர். ரகுநாத் இயக்கி இருந்தார். டி. ஆர். மகாலிங்கம், பி. ஆர். பந்துலு, வி. கே. ராமசாமி, கே. ஏ. தங்கவேலு, கே. சாரங்கபாணி, குமாரி கமலா, பேபி ராதா, ஈ. வி. சரோஜா, லக்ஸ்மி பிரபா உள்பட பலர் நடித்திருந்தனர். டி. ஜி. லிங்கப்பா இசை அமைத்திருந்தார்.
இந்த படத்தில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்பதற்காக அப்போது ராசியான நடிகையாக கருதப்பட்ட குமாரி கமலாவை நாயகியாக்கினார். பாடல்களை சிரத்தை எடுத்து பாடினார். 'தீர்த்தக் கரையினிலே', 'மோகத்தைக் கொன்றுவிடு', 'விதிக்கு மனிதன் விளையாட்டு பொம்மை' போன்ற பாடல்கள் பெரும் வெற்றி பெற்றது.
படத்திற்கு முதலில் 'விளையாட்டு பிள்ளை' என்று டைட்டில் வைக்கப்பட்டது. ஆனால் இந்த டைட்டில் வெற்றியைத் தராது என்று ஜோதிடர்கள் கூறியதால் 'விளையாட்டு பொம்மை' என்று படத்தின் டைட்டிலையும் மாற்றினார். ஆனால் படம் தோல்வி அடைந்தது.




