'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மதுமிதா ஜீ தமிழில் ஒளிபரப்பான 'பிரியாத வரம் வேண்டும்' சீரியலின் மூலம் தமிழில் அறிமுகமானார். தென்னிந்திய மொழிகளிலும் ஆக்டிவாக பல சீரியல்களில் நடித்து வருகிறார். இருப்பினும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எதிர்நீச்சல் ஜனனி கதாபாத்திரம் தான் அவரை கொண்டு போய் சேர்த்தது. இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ஒரு விருது நிகழ்ச்சியில் மதுமிதாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதானது எதிர்நீச்சல் தொடரில் மதுமிதா நடித்து வரும் ஜனனி கதாபாத்திரத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
எதிர்நீச்சல் தொடருக்கு குடும்ப பெண்கள் மட்டுமில்லாமல், ஆண்கள், கல்லூரி மாணவர்கள் என பலதரப்பினரும் ரசிகர்களாக உள்ளனர். வழக்கமான மசாலா சீரியலாக இல்லாமல் எதார்த்த கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் அனைத்து நடிகர்களும் போட்டி போட்டு நடித்து வருகின்றனர். அந்த தொடரின் ஹீரோயினான மதுமிதாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டதை சீரியல் குழுவினர், ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடி வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.