செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
விஜய் டிவியின் குக் வித் கோமாளி-4, முந்தைய சீசன்களை போலவே சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இதுவரை 3 போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். புதிய குக்குகளும், கோமாளிகளும் நிகழ்ச்சியை மேலும் எண்டர்டெயின்மெண்டாக கொண்டு செல்கின்றனர். அதிலும், கோமாளியாக களமிறங்கியுள்ள மோனிஷாவுக்கு புது ரசிகர்கள் பட்டாளமே உருவாகி வருகிறது. வாராவாரம் வித்தியாசமான டாஸ்க்குகளுடன், வித்தியாசமான கெட்டப் போட்டு களமிறங்கும் கோமாளிகளுக்கு இந்த வாரம் குக்குகளை போலவே இமிடேட் செய்யும் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், குரேஷி சிருஷ்டி போலவும், புகழ் ஷெரின் போலவும், ரவீனா விசித்ரா போலவும், ஜி.பி. முத்து காளையன் போலவும் கெட்டப் போட்டு வந்துள்ளனர். இதில், சிவாங்கி போலவே கெட்டப் போட்டுள்ள மோனிஷா அவரை போலவே மிமிக்ரி செய்து கலக்கியுள்ளார். இரண்டு சிவாங்கியை ஒரே ஸ்கீரினில் பார்க்கும் ஆர்வமும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.