செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அறியப்பட்டவர் மோனிஷா பிளஸ்சி. 'மாவீரன்' படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்துள்ள 'சுழல் 2 'வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது அவர் ரஜினியுடன் 'கூலி' படத்திலும், விஜய்யுடன் 'ஜனநாயகன்' படத்திலும் நடித்துள்ளார்.
இதுகுறித்த அவர் கூறியிருப்பதாவது : 'மாவீரன்' படத்தில் நான் நடித்ததை பார்த்துதான் சுழல் தொடருக்கு என்னை தொடர்பு கொண்டார்கள். 'முப்பி' கேரக்டருக்கு சண்டை காட்சிகள் இருக்கிறது. நன்றாக பயிற்சி எடுத்து நடிக்க வேண்டும், காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றார்கள். துணிந்து நடித்தேன். எனது கேரக்டர் இப்போது பேசப்படுகிறது.
இதை பார்த்துவிட்டுதான் 'கூலி' படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஜனநாயகன் பூஜைக்கு என்னைக் கூப்பிட்டதையே என்னால நம்ப முடியவில்லை. அந்த பூஜையில் வேற ஒரு உலகத்துல இருக்கிற மாதிரிதான் இருந்தேன். விஜய் சார்கிட்ட நான் ஒரு போட்டோ எடுத்துக்கலாமானு கேட்கவும், வாங்கனு சொல்லிக் கூப்பிட்டார். அவர் பக்கத்துல எந்த ரியாக்ஷனுமே இல்லாம தான் நின்னேன். அந்தத் தருணம் கனவைவிடப் பெருசு " என்றார் மோனிஷா.