மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர் | புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் | சண்டைக் காட்சியில் நடித்த போது விபத்து! ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் மருத்துவமனையில் அனுமதி! | ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ் | பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ் | போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து |
கன்னட சின்னத்திரை நடிகையான மதுமிதா தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் பேவரைட்டான நடிகையாக மாறியுள்ளார். முன்னதாக கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் ஏற்கனவே சீரியல்கள் நடித்திருந்தாலும் மதுமிதாவுக்கு எதிர்நீச்சல் சீரியலின் ஜனனி கதாபாத்திரம் தனியொரு இடத்தை பெற்று தந்துள்ளது. நன்றாக தமிழ் பேச கற்றுக்கொண்டுள்ள மதுமிதா அண்மையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், 'முன்னதாக நடித்த சீரியல்களில் ஓவர் ஆக்ட் செய்வேன். அது அந்த சீரியல்களுக்கு தேவைப்பட்டது. ஆனால் எதிர்நீச்சல் தொடர் நிஜவாழ்க்கையுடன் கனக்ட் ஆகிறது. மற்ற சீரியல்களை போல் அல்லாமல் எதிர்நீச்சல் தொடரில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கிடைக்கிறது. ஈஸ்வரி, நந்தினி கதாபாத்திரங்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள். குறிப்பாக மாரிமுத்து அனைவர் வீட்டிலும் இருக்கிறார். மாரிமுத்துவை அடிக்க வேண்டும் என என்னிடமே சொல்கிறார்கள். அந்த அளவிற்கு அனைவரிடத்திலும் ரீச்சாகியுள்ளது. இந்த தொடரில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. 10 வருடம் இந்த சீரியல் தொடர்ந்தால் கூட கண்டிப்பாக நடிப்பேன். இங்கேயே செட்டிலாகிவிடுவேன்' என்று கூறியுள்ளார்.