ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

ஹிந்தியில் நாகினி போல் தமிழ் சின்னத்திரையில் நாகத்தை வைத்து எடுக்கப்பட்ட பேண்டஸி கதை நந்தினி. அதிக பொருட்செலவில் உருவான இந்த தொடரில் விஜயகுமார், நித்யா ராம், மாளவிகா வேல்ஸ், ராகுல் ரவி உட்பட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த தொடரில் ஹீரோயினாக நடித்த நித்யா ராமுக்கு தமிழில் அதிக ரசிகர்கள் கிடைத்தனர்.
நந்தினி தொடர் 2018-ல் முடிவடைந்த பிறகு நித்யா ராம் தமிழில் எந்த சீரியலிலும் கமிட்டாகவில்லை. இதனால் வாடிப்போன ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் நித்யா ராம் ஜீ தமிழ் சீரியலில் நடிக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழில் புதிதாக உருவாகி வரும் அண்ணா என்கிற தொடரில் நித்யா ராம் ஹீரோயினாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'சரவணன் மீனாட்சி' செந்தில் நடிக்கிறார். மேலும், குக் வித் கோமாளி, பாக்கியலெட்சுமி ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ரித்திகா தமிழ்செல்வியும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நித்யா ராம் 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரியாவதை ரசிகர்கள் பலரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.




