ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதி சில மாதங்களுக்கு முன் சிம்பு தன்னை லவ் டார்ச்சர் செய்வதாக கூறி பீதியை கிளப்பினார். அதன்பின் தனது தோழியும் சக நடிகையுமான நக்ஷத்திராவின் காதல் வாழ்க்கை குறித்து பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களை சொன்னதுடன், மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவை போல நக்ஷத்திராவுக்கும் சோகம் ஏற்படலாம் என குண்டை தூக்கிப்போட்டார். இதுகுறித்து விளக்கமளித்த நக்ஷத்திரா ஸ்ரீநிதிக்கு மனநலம் சரியில்லை என்றும், அவர் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்.
மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளிவந்த ஸ்ரீநிதி அதன்பின் சீரியல்கள் எதிலும் கமிட்டாகவில்லை. இன்ஸ்டாகிராமில் மட்டும் போட்டோ, வீடியோ என ஆக்டிவாக பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், ஸ்ரீநிதியும் நக்ஷத்திராவும் ஒரே மாதிரியான கருப்பு உடை அணிந்து ஒன்றாக சேர்ந்து நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நக்ஷத்திரா தற்போது கர்ப்பமாக உள்ள சூழலில் அவரை சந்தித்துள்ள ஸ்ரீநிதி தங்கள் பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டதாக தெரிகிறது. ஒருவழியாக தோழிகள் இருவரும் மீண்டும் இணைந்திருப்பதை பார்த்து 'இதுதாங்க நட்பு' என சல்யூட் அடித்து வருகின்றனர் ரசிகர்கள்.