பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் பட்டத்தை வென்றார். அசீமின் இந்த சோஷியல் மீடியாக்களில் பிரபலங்கள், சக ஹவுஸ்மேட்டுகள் உட்பட பலரும் விமர்சித்து வருகின்றனர். சில ஆங்கில ஊடகங்கள் கூட அசீம் ஜெயித்தது தவறான முன் உதாரணம் என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டது. இதனால் அசீமின் ரசிகர்களும் சோஷியல் மீடியாக்களில் அசீமுக்கு ஆதரவாக சண்டையிட்டு வருகின்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அசீம் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், 'சிலர் தோல்வியை தாங்க முடியாமல் பேசுவதை நாம் பொருட்படுத்த வேண்டாம். நம்மை நோக்கி சுமத்தப்படும் விமர்சனங்கள் வெறும் சொற்களே தானே தவிர நம்மை தாக்கும் கற்கள் அல்ல. அதை படிக்கல்லாக பயன்படுத்தி நம் இலக்கை அடைவோம். நாம் செய்யப்போகும் நற்செயல்கள் பல' என கெத்தாக போஸ்ட் போட்டுள்ளார். அசீமின் ரசிகர்களோ இதையே கன்டன்ட்டாக வைத்து அடுத்த சண்டையை சோஷியல் மீடியாவில் தொடங்கியுள்ளனர்.