எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தொலைக்காட்சி பிரபலமான தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஊடக வெளிச்சம் பெற்றனர். அதேசமயம் அவர்களது குடும்ப விவகாரமும், சண்டையும் கூட மீடியாவில் பேசுபொருளானது. தற்போது பாலாஜியை பிரிந்து வாழ்ந்து வரும் நித்யா, மகள் போஷிகாவுடன் சென்னை மாதவரம் பகுதியில் சாஸ்திரி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நித்யா பக்கத்துவீட்டுக்காரரின் கார் மீது கல் வீசி உடைத்த புகாரில் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து ஜாமீனில் வந்துள்ள நித்யா தனது கைது குறித்து கூறுகையில், 'அவர் பெயர் மணி. ஓய்வு பெற்ற ஆசிரியர். தற்போது மளிகை கடை நடத்தி வருகிறார். எனக்கும் என் கணவருக்கும் பிரச்னை நடக்கும் போதெல்லாம் அவர் என் கணவருக்கே சப்போர்ட்டாக இருப்பார். பாலாஜி என்னை அடிப்பதை வேடிக்கை பார்ப்பார். எனவே எங்களுக்குள் சுமூகமான நட்பு கிடையாது. பொங்கல் தினத்தில் கூட என்னுடன் சண்டை போட்டார். என்னை பற்றி அவதூறாக பேசுவார். இப்போது அவருடைய காரை நான் சேதப்படுத்தியதாக பொய்யாக புகார் அளித்துள்ளார். சம்பவம் அன்று நான் துணிவு படம் பார்த்துவிட்டு வந்தேன். அப்போது எடுத்த சிசிடிவி காட்சி தான் வைரலாகி வருகிறது. போலீசாரிடம் என் மீதான புகாரை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டியிருக்கிறார். எனவே, அவரை எதிர்கொள்வது என்ற முடிவில், நானும் அவர் மீது புகார் அளிக்க உள்ளேன்' என்று கூறியுள்ளார்.