ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
சின்னத்திரை நடிகை மஹாலெட்சுமி சினிமா தயாரிப்பாளரான ரவீந்தரை திருமணம் செய்துகொண்ட சர்ச்சை சோஷியல் மீடியாக்களில் கொடிமழை செடிமழையாக ஓயாது ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும், மஹாலெட்சுமி பணத்துக்காக தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்ற குற்றசாட்டும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒரு பேட்டியில் மஹாலெட்சுமி கூறும்போது, 'என் அப்பாவும் சினிமாவில் தான் இருக்கிறார். 'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்', 'பொன்னியின் செல்வன்' என பல பெரிய பட்ஜெட் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். தெலுங்கில் சங்கர் ஐயா என்றால் அனைவருக்கும் தெரியும். நானும் கூட, 3 சீரியல் 2 படங்கள் என பிசியாக நடித்து வருகிறேன். வசதியாக வாழ எங்களிடம் இருக்கும் பணமே போதும். எனது சம்பளம் மட்டும் 3 லட்சம். இது போதாது என்றா நான் பணத்திற்காக இவரை திருமணம் செய்தேன். நிச்சயம் கிடையாது' என நெத்தியடியாக பதிலடி கொடுத்துள்ளார்.