சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சின்னத்திரை ஆங்கர் அர்ச்சனா தமிழின் முன்னணி சேனல்களில் பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அவரை பிடிக்காதவர்களே இருக்க முடியாது, என்று சொல்லுமளவுக்கு பெயரெடுத்திருந்தார். ஆனால், அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி கெட்டபெயரை பெற்று தந்தது. பிக்பாஸ் சென்ற அர்ச்சனாவை பலரும் வெறுத்து விமர்சித்தனர். இந்நிலையில், தற்போது ஊடகம் ஒன்றுக்கு சாராவும் அர்ச்சனாவும் சேர்ந்து பேட்டியளித்தனர். அப்போது, சாராவிடம் அர்ச்சனா செய்ததில் பிடித்தது, பிடிக்காதது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய சாரா, 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பேட்டி எடுத்தது மிகவும் பிடித்தது. ஆனால், அம்மா பிக்பாஸ் போனது பிடிக்கவில்லை. அதனால் தான் அவரை பற்றிய நெகடிவ் கமெண்டுகள் வந்தன. என் அம்மாவை பற்றி எனக்கு தெரியும். ஆனால், வெறும் 40 நிமிடத்தை பார்த்துவிட்டு எல்லோரும் அவரை ஜட்ஜ் செய்தார்கள். ஆனாலும், அம்மா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போயிருக்கக்கூடாது' என்று கூறியுள்ளார்.