தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சமந்தா | பிரபாஸின் சலார் படத்தில் யஷ் | தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் 'எல்.ஜி.எம்' : சென்னையில் ஆரம்பம் | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் : ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பம் | சிவகார்த்திகேயனின் மாவீரன் பட கதை மாற்றமா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | விஜய் சேதுபதி தந்த பர்த்டே சர்ப்ரைஸ் : வாயடைத்து போன பவித்ரா ஜனனி | பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகாவாக வனிதாவா? | அசீமின் வெற்றி சமூகத்துக்கு ஆபத்து - பிக்பாஸ் விக்ரமன் பளார் பேட்டி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிநயா | தமிழ் நடிகர்களுக்கு மரியாதையுடன் அதிக சம்பளம் : சம்பத்ராம் |
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களை கவரும் வகையில் பிரபலங்களை கெஸ்ட் ரோலில் நடிக்க வைப்பது வழக்கமாக வருகிறது. அந்த வகையில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'சில்லுன்னு ஒரு காதல்' தொடரில் மாதந்தோறும் முன்னணி பிரபலங்கள் வரிசையாக கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுத்து வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இந்த தொடரில் இதற்கு முன்னதாக சிங்கமுத்து, சஞ்சனா சிங், அபிராமி வெங்கடாசலம், சோனா, ராகவி, ராஜேஷ், மிமிக்ரி ஆர்டிஸ்ட் சேது உள்ளிட்டோர் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்திருந்தனர். தற்போது அந்த லிஸ்டில் மேலும் இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளனர். அம்மன் சீரியலில் நடித்த அமல்ஜித் செய்தியாளர் ரோலிலும், பிரஜின் போலீஸ் வேடத்திலும் என்ட்ரி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக குறுகிய காலக்கட்டத்தில் அதிக கெஸ்ட் ரோலினை புகுத்திய முதல் தமிழ் தொடர் என்கிற ரெக்கார்டை 'சில்லுன்னு ஒரு காதல்' செய்யும் என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். நடிகர் பிரஜின் நீண்ட நாட்களுக்கு பிறகு சின்னத்திரையில் என்ட்ரி கொடுப்பதால் ரசிகர்கள் பலரும் அவரது வருகையை ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.