மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
பிரைம் டைமில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்து வரும் சீரியல் 'எதிர்நீச்சல்'. இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் நீண்ட நாளைக்கு பிறகு வெளிவந்துள்ள இந்த தொடர் புதுமையான கதைக்களத்துடன் குடும்பத்து பெண்களை மட்டுமல்லாமல், படித்த இளம் பெண்களையும் கவர்ந்து வருகிறது. அந்த அளவுக்கு இதன் கதைக்களம் மட்டும் கதாபாத்திர வடிவமைப்பு மிக சுவாரசியமாக உள்ளது.
இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை மதுமிதா. சீரியலில் குடும்ப பெண்ணாக அடக்க ஒடுக்கமாக சுடிதார், புடவைகளில் ஜொலித்து வருகிறார். அதேசமயம் சமூகவலைதளத்தில் மதுமிதா அவரது தோழியுடன் சேர்ந்து வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்துமே ஏ1 தான். இந்நிலையில், மதுமிதா புடவை கட்டி தேவதை போல் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்துவிட்டு ரசிகர்கள் 'ஊதா ஊதா ஊதாப்பூ' என பாடலை முனுமுனுத்து வருகின்றனர்.