ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் வியாபாரம்! | 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? | மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! | கர்நாடகாவில் மற்றுமொரு சாதனை படைத்த 'காந்தாரா சாப்டர் 1' | தனுஷ் 54வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்து அப்டேட் ! | சாதியை எதிர்த்துதான் நான் படம் எடுக்கிறேன்! சொல்கிறார் மாரி செல்வராஜ் | சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை போட்ட நீதிமன்றம்! |

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்குமிடையே நடக்கும் பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போது, தன்னை பற்றியும் தனது மகள் பற்றியும் தவறாக பேசக்கூடாது என பாலாஜியை நித்யா எச்சரித்திருந்தார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த தாடி பாலாஜி ஊடகங்களில் 'நித்யா எனது மகளை வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுகிறார்' என பேட்டியளித்திருந்தார். இதையடுத்து இவர்கள் பிரச்னை ஊடகங்களில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நித்யாவிடம் தொடர்பு இந்த விவகாரம் குறித்து பேசியது. அதற்கு பதிலளித்த நித்யா, 'ஊடகத்தில் பேசி எனக்கு தீர்வு கிடைக்குமா? உங்களுக்கு கன்டன்ட் தான் கிடைக்கும். எனக்கு எங்கு பேசினால் நீதி கிடைக்குமோ அங்கு பேசிக்கொள்கிறேன்' என கூறியிருந்தார். தொடர்ந்து செய்தியாளர், பிக்பாஸ் வீட்டில் கமல் நித்யாவை அழைத்து அட்வைஸ் செய்தது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது நித்யா, 'யாரு அவரா? வேண்டாங்க. அவர பத்தி பேச வச்சிராதீங்க. நான் நிறைய கன்டன்ட் வெளிய விட்டுருவேன். அவர மாதிரி மோசமான கேரக்டர என் லைப்ல பாத்தது இல்ல. வேண்டாம் என்ன நிறைய பேச வச்சிராதீங்க' என கூறுகிறார். நித்யா பேசியிருக்கும் இந்த ஆடியோ க்ளிப் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.