காதலர் ஆண்டனியை மணந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ் : கோவாவில் திருமணம் கோலாகலம் | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மலையாள இயக்குனருடன் இணையும் சூர்யா | நான் பத்தாம் வகுப்பு பெயில் - கத்ரீனா கைப் | சித்தார்த் கைவசம் 8 புதிய படங்கள் | ‛‛நாங்கள் பரம எதிரிகள் கிடையாது. ஆனால்...'': தனுஷ் பற்றி மனம்திறந்த நயன்தாரா | 5 மொழிகளில் வெளியாகும் அய்யப்பன் படம் | பிளாஷ்பேக் : மோகனை முழுமையான ஹீரோவாக்கிய 'கிளிஞ்சல்கள்' | சீரியல் நடிகை கீதாஞ்சலிக்கு ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துகள் | புஷ்பா 2 - தமிழகத்தில் 50 கோடி வசூல் |
சில தினங்களுக்கு முன் இணையத்தில் நடிகை குஷ்புவின் புகைப்படம் ஒன்று வைரலானது. அதில் அவர் கன்னத்தில் நான்கு விரல்களின் தடம் பதிந்திருப்பதையும், கன்னம் வீங்கியிருப்பதையும் பார்த்து பலரும் பதறிப்போனார்கள். நடிகை குஷ்புவும் அதற்கேற்றார் போல் #ஸ்டேன்ட்வித்மீ, #ஸேநோடூவைலன்ஸ், #ஸ்பீக்அப்நவ் ஆகிய ஹாஸ்டாக்குகளை போட்டிருந்தார். இதனால் பலரும் குஷ்புவுக்கு ஏதோ அநீதி நிகழ்ந்துவிட்டதாக அவரை நலம் விசாரித்து வந்தார்கள். இந்நிலையில் அது தொடர்பில் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
உண்மையில் குஷ்புவை யாரும் அடிக்கவில்லை. அவர் புதிதாக நடிக்கும் சீரியலுக்கான புரோமோஷனுக்காக தான் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார். குஷ்பு, கலர்ஸ் தமிழ் சேனலுக்காக புதிதாக நடித்து வரும் சீரியல் மீரா. இதில் ஆணாதிக்க சிந்தனையுள்ள கணவரிடம் இருந்து பிரிந்து சென்று சொந்தக்காலில் ஜெயித்துக்காட்டும் பெண்ணாக குஷ்பு நடிக்கவுள்ளார். மேலும், இந்த சீரியல் சமூகத்தில் நிகழ்ந்து வரும் ஆணாதிக்கம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கேள்வி கேட்கும் வகையில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.