காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
2022ல் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஜீ தமிழ் விமர்சையாக துவங்கியது. இப்போது மார்ச் மாதத்தில் அனைவரையும் கோலாகலத்தில் மூழ்கடிக்க மெகா திருமண வைபவத்தை ஆரம்பித்துள்ளது. இந்த சிறப்பு இரண்டு மணிநேர கல்யாண வைபோகம் ஒரு வாரந்திரத் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ளது. ரசிகர்களுக்குப் பிடித்தமான தொடர்களின் மூலமாக திருமண சம்பிரதாயங்களையும், அழியா ஞாபகங்களையும் இந்நிகழ்ச்சி உங்கள் கண்முன் கொண்டு வரும்.
அதன்படி நேற்று மார்ச் 6ல் முதல்வார 'மெகா திருமண வைபவம்' ஜீ தமிழ் தொலைக்காட்சியில் துவங்கி உள்ளது. இதனை முன்னிட்டு, கடந்த 4ம் தேதி சென்னை, மதுரை, கோவை ஆகிய ஊர்களில் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் 4 ஜோடிகளுக்கு ஜீ தமிழ் சார்பாக தாம்பூல தட்டு சீர்வரிசை பொருட்களுடன் வழங்கப்பட்டது. தாய்வீட்டு சீதனம் போன்று கல்யாணமாலை, பட்டுவேட்டி சேலை, இனிப்பு, பழங்கள் மற்றும் வெத்தலை பாக்குடன் ஜீதமிழ் சார்பாக வழங்கி மணமக்களை ஜீ தமிழ் வாழ்த்தியது.