ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
கிருஷ்ணன் - ஸ்ருதி நடிப்பில் தாய் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் தொடர் தாலாட்டு. ரசிகர்களின் மனதில் நெருக்கமாக இடம் பிடித்துள்ள இந்த செண்டிமெண்ட் தொடரில், தற்போது வில்லியாக பிரபல் சீரியல் நடிகை மவுனிகா எண்ட்ரி கொடுத்துள்ளார். மவுனிகா, வீஜே மலர் நடித்து வந்த தாரா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சில நாட்களுக்கு முன்பு வரை சின்ன சின்ன வில்லத்தனங்களை செய்து கொண்ட இந்த கதாபாத்திரம் தற்போது அதிக முக்கியத்துவம் பெறுவது போல் திரைக்கதை மாற்றப்பட்டுள்ளது.
அதோடு, வீஜே மலரும் தொடரை விட்டு விலகிய காரணத்தால் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என மெளனிகாவை சீரியல் குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர். மவுனிகா, வானத்தை போல தொடரிலும், ஜீ தமிழின் செம்பருத்தி தொடரிலும் ஏற்கனவே வில்லியாக நடித்து வருகிறார். அவர் தற்போது தாலாட்டு தொடரில் எண்ட்ரி கொடுத்துள்ளதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.