‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. போட்டியாளர்கள் அனைவருமே ஏற்கனவே மக்களுக்கு பரிட்சயமானவர்கள் என்பதால் பிக்பாஸ் வீட்டில் முதல் நாளிலேயே முதல்வார எலிமினேஷனுக்காக நாமினேஷன் நடந்தது. இதில் வனிதா மற்றும் ஜூலியின் பெயரை பலரும் நாமினேட் செய்திருந்தனர். வனிதாவும் ஜூலியும் எலிமினேஷனில் இருந்து தப்பிப்பது என்பது ரசிகர்களின் அளிக்கும் வாக்கில் தான் இருந்தது. மக்களும் எலிமினேஷனுக்கான வாக்குகளை அளித்து வந்த நிலையில்அதன் முடிவு இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதில் அபிநய் தான் மிக குறைந்த ஓட்டுகளை வாங்கியுள்ளார் என தெரிய வருகிறது. இந்நிலையில் எவிக்ஷன் டே ஆன இன்று அபிநய் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவரா? அல்லது முதல் வாரம் என்பதால் எவிக்ஷன் இல்லாமல் அடுத்த வாரம் மீண்டும் எவிக்ஷனுக்கான நாமினேஷன் நடைபெறுமா? என மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.




