விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. திடீரென அந்த சீரியலை விட்டு விலகினார். இதனையடுத்து நடிகரும், இயக்குனருமான குருப்ரசாத்தின் கன்னட படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வருகிறார். சில்வர் ஸ்கிரீனில் எண்ட்ரி கொடுத்துவிட்டதால் மீண்டும் தொலைக்காட்சிக்கு வரமாட்டார் என ரசிகர்கள் கவலையடைந்தனர். இந்நிலையில் அவர் சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
ரச்சிதா ஜீ தமிழ் தொலைக்காட்சியின் செம்பருத்தி தொடரில் அம்மன் ரோலில் கேமியோவாக நடித்துள்ளார். செம்பருத்தி தொடரில் கடந்த சில வாரங்களாக ரசிகர்களை ஈர்க்கும் வகையில் சீரியல் கதாநாயகிகளை அம்மன் கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க வைத்து வருகின்றனர். அந்த வகையில் ரச்சிதாவும் ஒரு அம்மனாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் அவர் நினைத்தாலே இனிக்கும் தொடரில் தான் அம்மனாக நடிக்கிறார் எனவும் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. அவர் அம்மனாக நடிக்கவுள்ள தகவல் உறுதியாகியுள்ள நிலையில் எந்த சீரியலில் நடிக்கிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியாகவில்லை.