ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் 'மாமனிதன்'. இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர்.
இந்நிலையில், இப்படம் குறித்த சுவாரசிய தகவலை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார். அதன்படி மாமனிதன் படத்தின் கதையை வடிவேலு, பிரபுதேவா, மம்முட்டி ஆகியோரிடம் சொன்னதாகவும், இறுதியில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “மாமனிதன் படத்தின் கதையை முதலில் சகோதரர் வடிவேலு கேட்டு என்னை வாழ்த்தி "மேட்டர் ஹெவியா இருக்கே" என்றார். பிரபுதேவா கண்கலங்கினார். இந்தி படத்தால் அவர் வர இயலவில்லை. மம்மூட்டி இசைந்தார் ஆனால் ஈடேரவில்லை. முடிவில் வந்தது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. மிக அருகில் நல்ல சேதி” என சீனு ராமசாமி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.