10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் | 'ப்ரோ கோடு' தலைப்பிற்கு சிக்கல்: டில்லி உயர்நீதிமன்ற தடையால் தலைவலி | ரியோவுக்கு பிடித்த ஹீரோயின் : மனைவி சொன்ன பதில் | காதலருடன் புதிய படத்திற்கு பூஜை போட்ட சமந்தா | இந்த வாரம், ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் |

மக்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வந்த அர்ச்சனா தமிழில் முன்னணி சேனல்களில் பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை மா கா பா ஆனந்துடன் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வந்தார். மேலும் தன் மகளுடன் சேர்ந்து யூ-டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வந்தார். அப்போது அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து பத்து நாட்கள் ஓய்வுக்கு பின் வீடு திரும்பிய அர்ச்சனாவை இனி திரையில் காண முடியுமா என அவரது ரசிகர்கள் தவித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது பூரண உடல்நலத்துடன் இருக்கும் அர்ச்சனா விஜய் டிவியில் 'நம்ம வீட்டு கல்யாணம்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். பிரபலங்களின் திருமண நிகழ்வை ரசிகர்களுக்கு படம் பிடித்து காட்டும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது முதல் எபிசோடில் சினேகன் மற்றும் கன்னிகா ரவியின் திருமண வரவேற்பு ஸ்பெஷல் நிகழ்ச்சியாக படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த ஷூட்டிங்கில் அர்ச்சனா கலந்து கொண்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அர்ச்சனா திரையில் வருவாரா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது.