அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் | பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள் |

பிக்பாஸ் போட்டியாளர்கள் பங்கேற்கும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் பைனல் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. அதில் மிக சிறப்பாக நடனமாடி வந்த அனிதா சம்பத் - ஷாரிக் ஜோடி டைட்டில் பட்டம் வென்றுள்ளது. அவர்களுக்கு பரிசாக 3 லட்சம் வழங்கப்பட்டது. டைட்டில் ஜெயித்த மகிழ்ச்சியை அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் உருக்கமான பதிவுடன் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், 'உங்க எல்லோரட ஆதரவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. மூன்று மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி. குழந்தைய கையில் வாங்கினதுமே பிரசவ வலி மறந்து போகுற மாதிரி, தூக்கம் இல்லாம, நேரத்துக்கு சாப்பிடாம, வாங்கிய காயங்கள், பட்ட வலி எல்லாம் கையில கேடயத்தை வாங்கின உடனேயே பறந்து போச்சு!' என கூறி ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.




