டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

சின்னத்திரை பிரபலங்கள் சினிமாவிற்குள் நுழைவது மிகவும் எளிதாகிவிட்டது. அதிலும் சீரியல் ஹீரோயின்களாக மக்களின் மனதில் இடம் பிடித்த நடிகைகளுக்கு சினிமாவில் தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. வாணி போஜன், ப்ரியா பவாணி சங்கர், தர்ஷா குப்தா என பலரும் சீரியல்களில் நடித்து அதன் பின் சினிமாவில் கதாநாயகிகளாக உலா வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ஸ்ரேயா அஞ்சனும் தற்போது இணைந்துள்ளார். கலர்ஸ் தமிழின் திருமணம் தொடரில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரேயா அஞ்சன். தொடர்ந்து சின்னத்திரையில் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாகவும் உள்ளார். தமிழில் சில குறும்படங்களிலும், கன்னட மொழி படங்களில் சிறு கதாபாத்திரங்களிலும் நடித்திருந்த ஸ்ரேயா அஞ்சன் தற்போது 'ஐந்து உணர்வுகள்' என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். எழுத்தாள ஆர்.சூடாமணி எழுதிய கதையை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. படத்தின் போஸ்டர் லுக் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில் ஸ்ரேயாவுக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.