சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

சூப்பர் சிங்கர் 8வது சீசனின் வைல்டு கார்டு ரவுண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்துள்ள நிலையில், மக்கள் மனதில் இடம் பிடித்த இரண்டு போட்டியாளர்கள் பைனலுக்குள் செல்கின்றனர்.
சூப்பர் சிங்கர் 8-வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் இறுதிச் சுற்றுக்கு அனு, பரத், முத்து சிற்பி, அபிலாஷ் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இதற்கிடையே கடந்த 4 வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களான அய்யனார், ஸ்ரீதர் சேனா, மானசி, ஆதித்யா ஆகியோர்களுக்கு பைனலுக்குள் நுழைய இரண்டாம் வாய்ப்பாக வைல்டு கார்டு ரவுண்ட் நடத்தப்பட்டது. இவர்களில் ஒருவரை மக்களும், இன்னொருவரை நடுவர்களும் தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் மக்களின் அதிகமான வாக்குகளை பெற்று ஸ்ரீதர் சேனாவும், நடுவர்கள் தேர்வாக மானசியும் தேர்வாகி பைனலுக்குள் செல்கின்றனர். திறமையானவர்களின் மொத்த குவியலாக நடக்கவிருக்கும் இறுதிச்சுற்று போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.




