'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் | ஓடிடியில் வெளியானாலும் 50 நாட்களைக் கடந்தும் ஓடும் 'ஜெயிலர்' | கடுமையாகும் 2024 பொங்கல் போட்டி |
தெலுங்குத் திரையுலகத்தில் இளம் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொன்டா. தற்போது 'லிகர்' படத்தில் நடித்து வருகிறார். விஜய் அவரது பெற்றோர் சொந்த ஊரான தெலங்கானா மாநிலத்தில் உள்ள மெகபூப் நகரில் 'எவிடி சினிமாஸ்' என்ற பெயரில் கட்டியுள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டடரை வரும் 24ம் தேதி திறக்கிறார்.
அன்றைய தினம் கோவாவில் 'லிகர்' படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் தன்னால் தியேட்டர் திறப்புவிழாவில் கலந்து கொள்ள முடியாது என்றும் மெகபூப் நகர் மக்கள் அனைவரும் விழாவில் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஒரு இனிமையான, மகிழ்ச்சியான, முக்கியமான செய்தி ஒன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த வீடியோ. பல நாட்கள் கடுமையான உழைப்பிற்குப் பிறகு நடிகரானேன். அப்படி கனவு கண்டது நேற்று நடந்தது போல இருக்கிறது.
என்னுடைய முதல் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறப்பு பற்றி உங்களிடம் இன்று பகிர்கிறேன். 'எவிடி - ஏசியன் விஜய் தேவரகொன்டா சினிமாஸ்', எனது அப்பா, அம்மா சொந்த ஊரான மெகபூப் நகரில் திறக்கிறேன். மெகபூப் நகரின் அனைத்து மக்கள், நண்பர்கள், குடும்பத்தினரை அவர்களது மகிழ்ச்சியான நேரத்தை செலவிட, வெளியில் செல்ல, விசேஷ நாட்களில், விடுமுறை நாட்களில் வரவேற்கிறேன்.
ஒரு உலகத்தரம் வாய்ந்த, வசதியான, ஆடம்பரமான தியேட்டர் அனுபவத்தைத் தருவதே எங்களது லட்சியம். வரும் செப்டம்பர் 24ம் தேதி 'லவ் ஸ்டோரி' படத்துடன் ஆரம்பிக்கிறோம். சேகர் கம்முலா காரு இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கிறார்கள். எனது சினிமா வாழ்க்கை சேகர் கம்முலா காருவிடம் இருந்துதான் ஆரம்பமானது என்பது எனக்கு கூடுதலான மகிழ்ச்சி. லவ் ஸ்டோரி குழுவிற்கு எனது வாழ்த்துகள்.
எனது வாழ்க்கையில் தியேட்டரைத் திறப்பது பெரிய மகிழ்ச்சிதான். ஆனால், கோவாவில் பெரும் பட்ஜெட் படமான 'லிகர்' படப்பிடிப்பில் இருக்கிறேன். அதனால், என்னால் வர இயலவில்லை. பெரிய படம், படப்பிடிப்பு என இருப்பதால் அன்றைய தினம் வர இயலாததில் வருத்தமில்லை. இப்படியான விஷயங்களால் என்னால் பல வேலைகளைச் செய்ய முடிகிறது. தியேட்டர் திறப்பது, எனது அறக்கட்டளை போன்ற வேலைகள் நடக்கின்றன. அனைவருக்கும் எனது நன்றி, தியேட்டர் திறப்புக்கு வாருங்கள்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.