அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி உள்ள வெங்கட்பிரபு, அந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளை கவனித்து வருகிறார். இதையடுத்து அவர் யாருடைய படத்தை இயக்கவுள்ளார் என்கிற கேள்வி எழுந்த நிலையில், நடிகர் கிச்சா சுதீப்பை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் சுதீப்பிற்கு வெங்கட்பிரபு கோரிய பிறந்தநாள் வாழ்த்தும் அதை உறுதி செய்வது போல இருந்தன.
ஆனால் அவரது அடுத்த படத்தில் பிரபுதேவாவையும், அரவிந்தசாமியையும் கூட்டணி சேர்த்து படம் இயக்க உள்ளாராம் வெங்கட் பிரபு. அந்தவகையில் மின்சார கனவு படத்தை அடுத்து, கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து மீண்டும் பிரபுதேவா - அரவிந்தசாமி இருவரும் இணைந்து நடிக்கும் படமாக இது இருக்கும்.
அதேசமயம் இந்தப்படத்தில் வில்லனாக கிச்சா சுதீப்பை நடிக்க வைக்கவும் முயற்சி செய்து வருகிறாராம். அப்படி கதை சொல்ல சென்ற சமயத்தில், சுதீப்புடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டதுடன் அவரது விருந்தோம்பல் குறித்தும் சிலாகித்து கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.