தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் |
தமிழில் முன்னணி ஹீரோக்களாக உள்ள விஜய், தனுஷ் போன்றவர்கள் தங்களது படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டு, அங்கேயும் குறிப்பிட்ட ரசிகர்களையும் ஓரளவு மார்க்கெட்டையும் கைப்பற்றி வைத்துள்ளார்கள். அந்த தைரியத்தில் தற்போது நேரடியாகவே தெலுங்கு படங்களில் நடிக்க களமிறங்கி விட்டார்கள்.. இதில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். சேகர் கம்முலா டைரக்சனில் தனுஷ் நடிக்கிறார்.
இதில் சேகர் கம்முலா தற்போது நாகசைதன்யா மற்றும் சாய்பல்லவி இணைந்து நடித்துள்ள லவ் ஸ்டோரி என்கிற படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இந்த படம் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில் சேகர் கம்முலா மற்றும் தனுஷ் என்கிற யூகிக்க முடியாத கூட்டணி அமைவதற்கு பின்னணியில் காரணமாக இருந்தவர் சாய்பல்லவி தான் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சேகர் கம்முலா இயக்கத்தில் லவ் ஸ்டோரி படத்தில் நடித்து வந்தபோது அவரது திறமையை பார்த்து வியந்த சாய் பல்லவி, தனுஷுடன் தனக்கு உள்ள நெருங்கிய நட்பின் அடிப்படையில் சேகர் கம்முலா பற்றி கூறி சிபாரிசு செய்தாராம். அதைத்தொடர்ந்து சேகர் கம்முலாவுடன் சந்திப்பு நிகழ்த்திய தனுஷ், அவர் சொன்ன கதையிலும் இம்ப்ரஸ் ஆகி உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம்.