பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ரகுல் பிரீத் சிங். தமிழில் கார்த்தியின் 'தீரன் அதிகாரம்' படத்தின் மூலம்தான் ரசிகர்களிடையே பிரபலமானார். இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் 'அயலான்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
தமிழில் கமலின் 'இந்தியன் 2' படம் மட்டும் கைவசம் வைத்துள்ளார். தமிழை தவிர தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் போதை பொருள் தொடர்பான வழக்கில் சிக்கி விசாரணை வளையத்துக்குள் இருக்கிறார். சில தினங்களுக்கு முன் இவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உடலை பிட்டாக வைத்துக்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட ரகுல், யோகா செய்யும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கும் ரகுல், தனது ஸ்டைலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாடர்ன் தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.




