லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழக அரசு, கடையில் தொழிலாளர்கள் இருக்கையில் அமர்ந்து பணியாற்ற சட்டசபையில் சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்தது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தொழிலாளர்களின் இத்தகைய கஷ்ட நிலையை, அங்காடித்தெரு படத்தில் இயக்குனர் வசந்தபாலன் கூறியிருப்பார்.
அரசின் இந்த நடவடிக்கை குறித்து சமூகவலைதளத்தில் அவர் கூறியதாவது: அங்காடித்தெரு படத்தின் கனவு மெல்ல நிறைவேறுகிறது. அப்படத்தில் நின்று கொண்டே பணியாற்றுவதால் ஏற்படும் வெரிகோஸ் நோய் பற்றி கூறியிருந்தேன். தமிழக அரசின் நடவடிக்கைக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.