விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! |

அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ள படம் எனிமி. அவர்களுடன் மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமைய்யா என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் எனிமி படம் எப்போது தியேட்டருக்கு வரப்போகிறது என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆயுத பூஜை தினத்தில் படம் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார் விஷால். அதோடு 50 சதவிகிதம் இருக்கைகள அனுமதிக்கப்பட்டபோதும், எனிமி கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.